தேசிய, மாநில விளையாட்டுப் போட்டிகளில் - தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பாராட்டு :

தேசிய, மாநில விளையாட்டுப் போட்டிகளில்  -  தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பாராட்டு :
Updated on
1 min read

தேசிய, மாநில அளவிலான விளை யாட்டுப் போட்டிகளில் தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்கள் வென்ற மாற்றுத்திறன் வீரர்கள், வீராங்கனைகளுக்கு பெரம்பலூரில் நேற்று முன்தினம் பாராட்டு விழா நடைபெற்றது.

தேசிய மற்றும் மாநில அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள விளையாட்டு போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இதில் ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், தட்டு எறிதல், ஸ்கிப்பிங், நீச்சல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்ட பெரம் பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் கலைச் செல்வன், ரமேஷ், அம்பிகா, அருள், லக்ஷ்மணன், கார்த்திக் ராஜா, மீனா, லதா, கிருபாகரன், நாகராஜ் ஆகியோர் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர்.

இதையடுத்து, பதக்கம் வென்ற வீரர்களுக்கு பெரம்பலூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற பாராட்டு விழா வுக்கு தமிழ்நாடு நுகர்வோர், சுற்றுச் சூழல் பாதுகாப்பு மற்றும் மக்கள் உரிமைக் கழக மாநிலச் செயலாளரும், பெரம்பலூர் மாவட்ட மாற்றுத்திறனாளி கள் நலச் சங்கத்தின் நிர்வாகக் குழு ஆலோசகருமான ராமலிங்கம் தலைமை வகித்தார். தலைவர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இந்தியன் ரெட்கிராஸ் பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெயராமன், தளிர் சேவா அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் சிவராஜ், இளைஞர்கள் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் சத்யா ஆகியோர் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினர். இதில் சபியுல்லா, நாகராஜ், கலைச்செல்வன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in