

கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் கவரப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ஜி.எம்.தர் வாண்டையார்(65). மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவரான இவர், சட்டப்பேரவைத் தேர்தலில் கும்பகோணம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், கரோனா பரிசோதனை செய்துகொண்டார். இதில், அவருக்கு கரோனா தொற்று இருப்பது நேற்று முன்தினம் இரவு உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, தஞ்சாவூர் அருளானந்த நகரில் உள்ள தனது மைத்துனரான மருத்துவர் வி.வரதராஜன் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.