கரோனா தொற்று இரண்டாம் அலை பரவல் அச்சத்தால் - வேலூர் மாவட்டத்தில் அனைத்து வாரச்சந்தைகள் மூடல் : முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க ஆட்சியர் உத்தரவு

கரோனா தொற்று பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. அருகில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார், வருவாய் அலுவலர் பார்த்தீபன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மாலதி உள்ளிட்டோர். அடுத்த படம்: வேலூர் அண்ணா சாலை டோல்கேட் பகுதி அருகே இருந்த உழவர் சந்தை தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டு தொரப்பாடி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று முதல்  செயல்பட்டது.படங்கள்: வி.எம்.மணிநாதன்.
கரோனா தொற்று பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. அருகில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார், வருவாய் அலுவலர் பார்த்தீபன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மாலதி உள்ளிட்டோர். அடுத்த படம்: வேலூர் அண்ணா சாலை டோல்கேட் பகுதி அருகே இருந்த உழவர் சந்தை தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டு தொரப்பாடி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று முதல் செயல்பட்டது.படங்கள்: வி.எம்.மணிநாதன்.
Updated on
1 min read

வேலூர் மாவட்டத்தில் கரோனா இரண்டாம் அலை பரவல் அச்சத்தால் அனைத்து வாரச்சந்தைகளையும் மூட உத்தரவிட் டுள்ளதுடன் வாக்காளர் பட்டியலை ஆய்வு செய்து 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோ சனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பேசும்போது, ‘‘வேலூர் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் 520 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த னர். தற்போது, 10 நாளில் 720 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கரோனா தொற்று பரவல் 3 மடங்கு அதிகரித்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற் பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்‌.

மாவட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள், பொதுத் துறை நிறு வனங்களில் பணியாற்றுபவர்கள் ஏப்ரல் 30-ம் தேதிக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இதேபோல், வியாபாரிகள் அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கடைகளில் தடுப்பூசி போட்டதற் கான ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட வேண்டும். கரோனா தடுப்பூசி போடாத வியாபாரிகளின் கடைக்கு அதிகாரிகள் ‘சீல்' வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குடியாத்தம், பேரணாம்பட்டு, நகராட்சி பகுதிகள் மற்றும் திருவலம், ஒடுக்கத்தூர், பள்ளி கொண்டா, பென்னாத்தூர் ஆகிய நான்கு பேரூராட்சி பகுதிகள் மற்றும் வேலூர், அணைக்கட்டு, கணியம்பாடி, காட்பாடி, கே.வி.குப்பம், குடியாத்தம் மற்றும் பேரணாம்பட்டு ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களிலும் வாக்காளர் பட்டியலை சரிபார்த்து 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்துவது என இலக்கு நிர்ணயித்து செயல்பட வேண்டும். மாவட்டத்தில் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போடாதவர்கள் இருந் தால் அவர்களுக்கு கட்டாயம் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாரச் சந்தைகளையும் மூட வேண்டும். பொதுமக்கள் வீடுகளுக்கே அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கும் வகையில் தெருக்களில் விற்பனை செய்ய வேண்டும். அத்துடன் சில்லறை காய்கறி கடைகள் ஏற்கெனவே செயல்பட்டு வந்த பள்ளி, கல்லூரி வளாகங்களில் செயல்படும். வேலூர் மாவட் டத்தில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணியில் அரசு ஊழியர்கள் தீவிர கவனம் செலுத்த வேண்டும்’’ என்றார்.

உழவர் சந்தை இடமாற்றம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in