‘தரமான செயற்கை இழை துணி கிடைக்க ஏ.இ.பி.சி தொடர் முயற்சி’ :

‘தரமான செயற்கை இழை துணி கிடைக்க ஏ.இ.பி.சி தொடர் முயற்சி’ :
Updated on
1 min read

ஏ.இ.பி.சி.சார்பில் செயற்கை இழை துணி இறக்குமதி குறித்த இணைய வழி கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில் ஏ.இ.பி.சி. தலைவர் ஏ.சக்திவேல் பேசும்போது, "2019- 20 நிதி ஆண்டில் நாட்டின் செயற்கைஇழை ஆடை ஏற்றுமதி, ரூ.ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 800 கோடி.இது, மொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதியில் 10 சதவீதம்.

செயற்கை இழை ஆடை ஏற்றுமதியை ரூ.14.60 லட்சம் கோடியாக உயர்த்துவது, இந்தியாவின் லட்சியம். சீனா, தைவான் நாட்டு நிறுவனங்கள், இந்திய நிறுவனங்களுக்கு சர்வதேச விலையில் செயற்கை இழை துணியை வழங்க வேண்டும். நாட்டில் ஏராளமான நூற்பாலைகள் உள்ளன.

தொழில்நுட்பங்கள் போதுமான அளவு இல்லாததால், செயற்கை இழை மற்றும் அதற்கான துணி குறைவாக கிடைக்கிறது. இந்திய நிறுவனங்களுக்கு தரமான செயற்கை இழை துணி கிடைக்க, ஏ.இ.பி.சி. தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது" என்றார்.

சீனாவின் ‘வ்யூ' டெக்ஸ்டைல்ஸ் குழும வர்த்தக பிரிவு தலைவர் மேகூறும்போது, "எங்கள் நிறுவனம் செயற்கை இழை துணி உற்பத்தி,சாயமேற்றுதல், பிரிண்டிங் தொழில்நுட்பங்களை செய்கிறது.இந்திய ஆடை உற்பத்தியாளர்களின் துணி தேவையை பூர்த்தி செய்ய தயாராக உள்ளோம்" என்றார்.

தைவான் ஹைபா டெக்ஸ்டைல்ஸ் விற்பனை பிரிவு தலைவர் முகேஷ் சர்மா கூறும்போது, "தைவான், சீனா, வியட்நாம் ஆகிய மூன்று நாடுகளில், எங்கள் செயற்கை நூலிழை உற்பத்தி ஆலைகள் இயங்குகின்றன. விளையாட்டு மற்றும் உயர்தர ஆடை தயாரிப்புக்கான துணி ரகங்களை, அனைத்து நாட்டு நிறுவனங்களுக்கும் ஏற்றுமதி செய்கிறோம்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in