கடலூர் மாவட்ட திரையரங்குகளில் - கிருமிநாசினி தெளித்து பொதுமக்கள் அனுமதி :

கடலூரில் ஒரு திரையரங்கில் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.
கடலூரில் ஒரு திரையரங்கில் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.
Updated on
1 min read

கடலூர் மாவட்டத்தில் உள்ளதிரையரங்குகளில் கிருமிநாசினிதெளித்து 50 சதவீதம் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

தமிழக அரசு கரோனா தடுப்புநடவடிக்கையாக புதிய கட்டுப் பாடுகளை அமல் படுத்தியுள்ளது. திரையரங்குகள், பெரிய நிறுவ னங்கள் போன்றவற்றில் 50 சதவீ தம் பொதுமக்களை அனுமதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. இதன்படி கடலூர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவ டிக்கைகளை எடுத்து வருகிறது.

கடலூரில் உள்ள திரை யரங்குகளில் தொற்று பரவலைதடுக்கும் வகையில் கிருமிநாசினிதெளிக்கப்படுகிறது. முகக்கவசம்அணிந்த 50 சதவீத பார்வையாளர்கள் திரையரங்கத்தின் உள்ளே அனு மதிக்கப்படுகின்றனர்.

திரையரங்க ஊழியர்கள் முகக்கவசத்துடன் உள்ளனர். இது போல மாவட்டத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் தொற்று தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 50 சதவீத பொதுமக்கள் அனு மதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து திரையரங்கத் தரப்பினர் கூறுகையில், "உட் கார்ந்து படம் பார்க்கும் இருக்கை கள் மற்றும் தியேட்டர் வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தியேட்டரில் முகக்கவசத்துடன் இருக்க அறி வுறுத்தப்பட்டுள்ளது" என்று தெரி வித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in