திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் சில்லறை விற்பனைக்கு தடை :

திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் சில்லறை விற்பனைக்கு தடை :
Updated on
1 min read

தமிழகத்தில் கரோனா 2-வது அலை பரவி வருகிறது. இதனால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் நகர் மத்தியில் அண்ணா வணிக வளாக மாடியில் மாநகராட்சிக்குச் சொந்தமான பூ மார்க்கெட் அதிகாலை முதல் இரவு வரை செயல்பட்டது. தற்போது அதிகாலை 5 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பூ மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மொத்த வியாபாரத்துக்கு மட்டுமே அனுமதி அளித்து, சில்லறை வியாபாரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in