

தட்டார்மடம் அருகே தெற்கு உடைப்பிறப்பில் முத்தாரம்மன் கோயில் உள்ளது.
இந்த கோயில் தர்மகர்த்தாவாக அதே ஊரைச் சேர்ந்த ரா.மனோகரன் இருந்து வருகிறார். கோயிலில் தினமும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை பூஜைகள் நடைபெறும். அதன்படி நேற்றுமுன்தினம் இரவு பூஜையை முடித்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று காலை கோயிலில் உள்ள உண்டியல் உடைக்கப்பட்டு கிட ந்தது. உண்டியலில் இருந்த காணிக்கை பணம் திருடப்பட்டிருந்தது. தர்மகர்த்தா புகாரின்பேரில் தட்டார்மடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.