கரோனா தடுப்பு பணிக்கு 37 சிறப்பு குழுக்கள் : தூத்துக்குடி ஆட்சியர் உத்தரவு

கரோனா தடுப்பு பணிக்கு   37 சிறப்பு குழுக்கள்  :  தூத்துக்குடி ஆட்சியர் உத்தரவு
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. தமிழக அரசின் நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை பொதுமக்கள் கடைபிடிப்பதை உறுதி செய்யவும், வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கவும் சிறப்பு குழுக்களை அமைத்து மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்கு ஒவ்வொரு மண்டல த்துக்கும் உதவி ஆணையர்கள் தலைமையில் தலா ஒரு குழு என, மொத்தம் 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோவில் பட்டி மற்றும் காயல்பட்டினம் நகராட்சிகளுக்கு அந்தந்த நகராட்சி ஆணையர்கள் தலைமையில் தலா ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 19 பேரூராட்சிகளுக்கும் 19 குழுக்கள், 12 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் தலா ஒரு குழு என 12 குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் மொத்தம் 37 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக் களில் துணை வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் போன்ற வருவாய்த் துறை அலுவலர்கள், சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், காவல் துறை சிறப்பு உதவி ஆய்வாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்த குழுவினர் பொது இடங்கள், நிறுவனங்கள், வணிக வளாகங்கள் ஆகியவற்றில் பொதுமக்கள் கரோனா தடுப்பு தொடர்பாக அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுகிறார்களா என கண்காணிப்பர்.

தனிமைப்படுத்துதலை மீறுவோருக்கு ரூ.500, முகக்கவசம் அணியாமல் இருப் போருக்கு ரூ.200, பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500, சமூக இடைவெளியை மீறினால் ரூ.500, சலூன் கடை, உடற்பயிற்சி கூடம் மற்றும் வணிக நிறுவனங்கள் கரோனா தொடர்பான வழிகாட்டு நெறிமுறை களை மீறினால் ரூ.5,000, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் அரசாங்க விதிமுறைகளை மீறும் தனி நபர்களுக்கு ரூ.500 அபராதம் வசூலிப்பர் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in