

வேலூர் அருகே விபத்தில் சிக்கிய நீதிமன்ற ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
வேலூர் அடுத்த துத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (42). இவர், ராணிப்பேட்டை நீதிமன்றத்தில் பணியாற்றி வந்தார். தினசரி இரு சக்கர வாகனத்தில் பணிக்கு செல்லும் பிரகாஷ் பணி முடிந்து வாகனம் மூலம் வீடு திரும்புவது வழக்கம்.
அதன்படி, நேற்று முன்தினம் மாலை பணி முடிந்து பிரகாஷ் தனது இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பினார்.
வேலூர் அடுத்த அலமேலு மங்காபுரம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே வந்தபோது சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனம் மீது பின்பக்கமாக மோதினார். இதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து சத்துவச்சாாரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.