முகக்கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் அஞ்சல் அதிகாரி :

பொதுமக்களிடம் முகக்கவசம் வழங்கிய திருப்புல்லாணி துணை அஞ்சலக அதிகாரி மோகன்.
பொதுமக்களிடம் முகக்கவசம் வழங்கிய திருப்புல்லாணி துணை அஞ்சலக அதிகாரி மோகன்.
Updated on
1 min read

திருப்புல்லாணியில் துணை அஞ்சலக அலுவலர் ஒருவர் பொதுமக்களுக்கு 1000 முகக்கவசங்களை இலவசமாக வழங்கி கரோனா விழிப்புணர்வு ஏற்படுத் தினார்.

நாடு முழுவதும் கரோனா பரவல் 2-வது அலை அதிகரித்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதனால் மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்டத்தின் முக்கிய ஊர்களில் வீதி வீதியாகச் சென்று கரோனா பரவலைத் தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தியும், முகக்கவசம் அணியாத பொதுமக்கள், வர்த்தக நிறுவனங்களில் அபராதம் விதித்தும் வருகிறார்.

இந்நிலையில், கரோனா விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வகையிலும், பொதுமக்கள் நலன் கருதியும், திருப் புல்லாணி துணை அஞ்சல அலுவலர் மோகன், பொதுமக்களுக்கு 1000 முகக்கவசங்களை இலவசமாக வழங்கினார். அவர் திருப்புல்லாணியில் தெருத் தெருவாகச் சென்று மக்கள் கூடியுள்ள இடங்களில முகக்கவசம் அணியாதவர்களிடம் முகக்கவசம் வழங்கி, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும், முகக்கவசம் அணிய வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in