சத்தியமங்கலம் வனப்பகுதியில் கடமான் வேட்டையாடிய 3 பேர் கைது :

சத்தியமங்கலம் வனப்பகுதியில்  கடமான் வேட்டையாடிய 3 பேர் கைது :
Updated on
1 min read

சத்தியமங்கலம் வனப்பகுதியில், கடமான் வேட்டையாடிய மூவரை வனத்துறையினர் கைது செய்தனர். தப்பியோடிய இருவரைத் தேடி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வடவள்ளி வனப்பகுதி செம்மன்குட்டை பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்றுள்ள னர். அப்போது, வனப்பகுதிக்குள் சுற்றித்திரிந்த ஐவரைப் பிடிக்க முயற்சித்தனர். இதில் மூவர் சிக்கிய நிலையில், இருவர் தப்பி யோடினர்.

பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் சத்தியமங்கலம் அருகே உள்ள ராமபைலூர் தொட்டியைச் சேர்ந்த ரங்கசாமி, நாராயணன், திருப்பூர் மாவட்டம் அவிநாசியைச் சேர்ந்த பழனிசாமி என்பதும், வனப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து,சிறிய குழி தோண்டி விவசாயத்திற்கு பயன்படுத்தப் படும் யூரியா உப்பு கலந்த தண்ணீரை குழிக்குள் ஊற்றி, அதனை குடிக்க வரும் கடமானை வேட்டையாடியது தெரியவந்தது.

அவர்களிடம் இருந்து இரண்டு கத்தி மற்றும் அவர்கள் வேட்டையாடிய கடமான் உடலை கைப்பற்றிய சத்தியமங்கலம் வனத்துறையினர், மூவரையும் கைது செய்தனர். தப்பியோடிய சதீஷ், மூர்த்தி ஆகியோரைத் தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in