

தூத்துக்குடி திருச்செந்தூர் சாலை சத்யா நகர் பாலம் அருகே இரு இளைஞர்கள் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் சாலையின் மத்தியில் இருந்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இரு இளைஞர்களும் காயமடைந்தனர்.
அப்போது அவ்வழியாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் வந்துள்ளார். அவர்இந்த சம்பவத்தை கண்டு உடனடியாக அந்த இளைஞர்கள் இருவரையும் தனது காரில் ஏற்றி, தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். மேலும் அவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்க மருத்துவமனை அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.
போலீஸாரின் விசாரணையில் அந்த இளைஞர்கள் முக்காணியைச் சேர்ந்தவர்கள் என்பதும், தூத்துக்குடிக்கு வந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்றும் தெரியவந்துள்ளது.