

பெரம்பலூரில் புதிதாக கட்டப்பட்ட வீட்டுக்கு வரி நிர்ணயம் செய்ய ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கைதான நகராட்சி வரி தண்டலரை பணியிடை நீக்கம் செய்து நகராட்சி ஆணையர் நேற்று உத்தரவிட்டுள்ளார்.
பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரிந்து வரும் தலைமைக் காவலர் வெங்கடேசன்(45) பெரம்பலூர் ரோஸ் நகரில் கட்டியுள்ள புதிய வீட்டுக்கு வரி நிர்ணயம் செய்ய, நகராட்சி வரி தண்டலர் அப்லோசன்(47) நேற்று முன்தினம் ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது பெரம்பலூர் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து, நகராட்சி வரி தண்டலர் அப்லோசனை பணியிடை நீக்கம் செய்து நகராட்சி ஆணையர் குமரிமன்னன் நேற்று உத்தரவிட்டுள்ளார்.