

வீராணத்தில் மனைவியை கழுத்தை அறுத்து கொன்று விட்டு, விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
வீராணம் கோராத்துப் பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி தங்கராஜ் (33). கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன்னர் இவருக்கும் சேலம் கன்னங்குறிச்சியை சேர்ந்த மோனிஷா (19) என்பவருக்கும் திருமணம் நடந்தது. நேற்று காலை நீண்ட நேரமாகியும் தங்கராஜின் வீட்டு கதவு திறக்காததால், உறவினர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த் தனர்.அப்போது, கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் மோனிஷா உயிரிழந்தார். அருகே தங்கராஜ் கேபிள் ஒயரில் தூக்கில் சடலமாக கிடந்தார்.
தகவல் அறிந்து அங்கு சென்ற காவல் உதவி ஆணையர் ஆனந்தகுமார் தலைமையிலான வீரபாண்டி போலீஸார் இருவரின் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.