சேலத்தில் 102 டிகிரி வெயில் பதிவு :

சேலத்தில் 102 டிகிரி வெயில் பதிவு :
Updated on
1 min read

சேலத்தில் நேற்று 102 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது.

சேலம் மாவட்டத்தில் கடந்த வாரம் வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிகபட்சமாக 109.1 டிகிரி பாரன்ஹீட் பதிவானது. கோடை கத்திரி வெயிலுக்கு முன்பாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்ததால் மக்கள் சிரமத்துக்குள்ளாகினர்.

இந்நிலையில், சில தினங்களாக வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த 2-ம் தேதி 108.4 டிகிரி பாரன்ஹீட்டாக இருந்த வெயில், சேலம் மாவட்டத்தில் ஆங்காங்கே பெய்த கோடை மழை காரணமாக, படிப்படியாக குறைந்து, 4-ம் தேதி 105.1, 5-ம் தேதி 102.6, நேற்று முன்தினம் 100.6 என படிப்படியாக குறைந்து நேற்று 102.6 டிகிரி பாரன்ஹீட் பதிவானது.

கடந்த வாரத்தை விட வெயில் தாக்கம் குறைந்ததால் மக்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in