குமரியில் அதிகரிக்கும் கரோனா - ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு பரிசோதனை :

குமரியில் அதிகரிக்கும் கரோனா -  ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு பரிசோதனை  :
Updated on
1 min read

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவி வருகிறது. இதனால்கேரள எல்லைப் பகுதியான களியக்காவிளை சோதனைச் சாவடியில் சோதனை பலப்படுத்தப்பட்டுள்ளது.

கேரளாவில் இருந்துவருவோரை வெப்ப சோதனைக்கு பின்னரே கன்னியாகுமரி மாவட்டத்துக்குள் சுகாதாரத்துறையினர் அனுமதிக்கின்றனர்.

இதைப்போல வெளிநாடுகளில் இருந்து வருவோர் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்துகளியக்காவிளை வழித்தடத்தில்செல்லும்போது கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இந்த மாத தொடக்கத்தில் இருந்து ஒருவாரத்தில் மட்டும் 150-க்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை, தக்கலை தலைமை மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முகக்கவசம் அணியாமல் வெளியே செல்பவர்களுக்கு சுகாதாரத்துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர். ஆனாலும், பெரும்பாலானோர் கரோனா விதிமுறைகளை கடைபிடிக்காமல் இருப்பதால், தொற்று மேலும் அதிகரிக்கும் நிலை உள்ளது.

குறிப்பாக தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்து ரயில், பேருந்துகளில் வருவோர் மூலம் கரோனா தொற்று அதிகமாக பரவி வருவது தெரியவந்துள்ளது.

இதனால் நாகர்கோவில் கோட்டாறு ரயில் நிலையம், கன்னியாகுமரி, இரணியல் ரயில்நிலையங்களில் சுகாதாரத்துறையினர் தடுப்பு நடவடிக்கையை வேகப்படுத்தியுள்ளனர். விழிப் புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்படுகின்றன.

பேருந்து நிலையங்களிலும் பயணிகளுக்கு வெப்ப பரி சோதனை செய்யப்படுகிறது.

திருநெல்வேலி

திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் ஆய்வகங்களில் நேற்றுமுன்தினம் 231 பேருக்கு கரோனாபரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.

மாவட்டத்தில் மருத்துவர் உட்பட மொத்தம் 26 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதில் 22 பேர் திருநெல்வேலி மாநகர பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

ராதாபுரம், களக்காடு, பாளையங்கோட்டை, பாப்பாகுடி வட்டாரங்களில் தலா ஒருவருக்கு பாதிப்புஉள்ளது.

திருநெல்வேலி மாநகரில் பாளையங்கோட்டை சாராள் தக்கர் கல்லூரிசாலையில் பிளசிங் சாலை, தியாகராஜ நகர் தாமிரபதி காலனி, பாளை ஜவஹர் நகர், ஐயப்பா நகர், ரெட்டியார்பட்டி நம்பிநகர், பொதிகை நகர், என்ஜிஓ காலனி 7-வது குறுக்குத்தெரு, பிள்ளையார் கோயில் தெரு, மகாராஜ நகர், டிவிஎஸ் நகர், ராஜேந்திர நகர் வடக்கு தெரு, தியாகராஜ நகர் 12-வது தெரு, பெருமாள்புரம், மேலப்பாளையம் நைனார் அப்பா நகர், பாளையங்கோட்டை இந்திராகாலனி, சிவன் கிழக்கு ரதவீதி உள்ளிட்ட இடங்களில் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் ஆய்வகங்களில் நேற்று முன்தினம் 231 பேருக்கு கரோனாபரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in