

திருப்பூர் கொங்கு பிரதான சாலைஇ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே உள்ள ஒரு வீட்டில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
வீட்டு வாசலின் முன்புறம் காலி மதுபாட்டில்கள் கிடந்தன. வீட்டுக்குள் ஆங்காங்கே அட்டைப் பெட்டிகளில் பல்வேறுவகையான 396 மதுபாட்டில்கள் இருந்தன. அவற்றை அதிகாரிகள் பறிமுதல்செய்தனர். புகாரின்பேரில் புதுக்கோட்டை நரியநேந்தல் பகுதியை சேர்ந்த பார்த்திபன் (24), புதுக்கோட்டை மீமிசல் பகுதியை சேர்ந்த ராஜேஷ் குமார் (22) ஆகிய 2 பேரைமதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் கைது செய்து, மதுவிற்பனைப் பணம் ரூ.13,950- ஐ பறிமுதல் செய்தனர்.