

திருநெல்வேலி மாவட்டத்தில் 92 பேருக்கு கரோனா பாதிப்பு நேற்று கண்டறியப்பட்டுள்ளது.
வட்டாரம் வாரியாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை விவரம்: திருநெல்வேலி மாநகரம்- 61, மானூர்,வள்ளியூர், களக்காடு- தலா 1, நாங்குநேரி, சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம்- தலா 4, பாளையங்கோட்டை- 12, பாப்பாக்குடி, ராதாபுரம்- தலா 2.
நாகர்கோவில்
கடந்த இரு நாட்களில் மட்டும் கன்னியாகுமரி மாவட்டத்தில் 61 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முகக்கவசம் அணியாதோருக்கு நகராட்சி, மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தினர் அபராதம் விதித்து வருகின்றனர்.