

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சென்னப் பநாய்க்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு. அதிமுக நிர்வாகி. இவர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக, தேர்தல் பறக்கும் படையினருக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து தேர்தல் பறக்கும்படை அலுவலர் மோகன் தலைமையிலான குழுவினர், ராமு வீட்டில் சோதனை நடத்தினர். அங்கு ரூ.2 லட்சத்து 33 ஆயிரத்து 500 இருந்ததை பறிமுதல் செய்தனர்.
பின்னர், மீண்டும் நேற்று காலையில் ராமு வீட்டில் தேர்தல் பறக்கும்படையினர் சோதனை மேற்கொண்டு ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்து 300-யை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரூ.3 லட்சத்து 53 ஆயிரத்து 800-யை தேர்தல் நடத்தும் அலுவலர் சேதுராமலிங்கம் மூலம் கருவூலத்தில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதேபோல் ஊத்தங்கரை செங்குந்தர் நகரில், தேர்தல் பறக்கும் படையினர் முத்து என்பவரது துணிக்கடை மற்றும் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது உரிய ஆவணங்கள் இல்லாமல் வைத்திருந்ததாக ரூ.3 லட்சத்து 36 ஆயிரத்து 800-யை பறிமுதல் செய்தனர்.
தளியில் ரூ.3.20 லட்சம் பறிமுதல்
அப்போது அந்த வழியாக காரில் வந்த அல்லாபாட்ஷா மற்றும் சுரேஷ் ஆகிய இருவரிடமும் நடத்தப்பட்ட சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த முறையே ரூ.2.50 லட்சம் ரொக்க பணமும், ரூ.70 ஆயிரம் ரொக்கப்பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.