

புதுக்கோட்டை மாவட்டம் காரையூர் அருகே அரிஞ்சனாம் பட்டியைச் சேர்ந்தவர் காசிநாதன் மகன் ராமச்சந்திரன்(37). இவர், தொடர்ந்து மணல் திருடியதாக காரையூர் காவல் நிலையத்தினர் அண்மையில் கைது செய்தனர்.
இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் பரிந்துரை யின் பேரில் ராமச்சந்திரனை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி நேற்று உத்தரவிட்டார்.