

ராயக்கோட்டை அருகே காரில் டீசல் திருடிய 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் திம்ஜேப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ரகு (25). இவர் தனது காரை ராயக்கோட்டை அருகே உள்ள முத்தம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே நிறுத்தி விட்டு அங்கிருந்த வயலுக்கு சென்றார். பின்னர் மீண்டும் அவர் வந்தார். அப்போது, அவரது காரில் இருந்து டீசலை 2 பேர் திருடிக் கொண்டிருந்தனர்.இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் டீசலை திருடியவர்களை பிடித்து ராயக்கோட்டை காவல் நிலையத்தில் ரகு ஒப்படைத்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.
விசாரணையில், டீசல் திருடியவர்கள் தேன்கனிக் கோட்டை அடுத்த காலேப்பள்ளி ராதா கிருஷ்ணன் (42), ஓசூர் மீனவர் தெருவைச் சேர்ந்தரமேஷ் (40) என தெரிந்தது. இதையடுத்து, 2 பேரையும் கைது செய்த போலீ ஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.