காடுவெட்டி குருவின் மனைவியை ஆதரித்து : ராதிகா பிரச்சாரம் :

காடுவெட்டி குருவின் மனைவியை ஆதரித்து : ராதிகா பிரச்சாரம் :

Published on

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தொகுதியில் ஐஜேகே சார்பில் போட்டியிடும் மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் மனைவி சொர்ணலதாவை ஆதரித்து, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் முதன்மை துணை பொதுச்செயலாளர் ராதிகா ஜெயங்கொண்டம் சன்னதி வீதியில் நேற்று முன்தினம் இரவு பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியது: திமுக, அதிமுக என இருகட்சிகளுக்கும் மாறி மாறி வாக்களித்தது போதும். இந்த முறை தமிழக அரசிய லில் ஒரு மாற்றத்தை கொண்டு வாருங்கள். ஜெயங்கொண்டம் தொகுதி மக்களின் அனைத்து பிரச்சினைகள், பெண்களின் பிரச்சினைகள், இளைஞர்கள் வேலைவாய்ப்பு உள் ளிட்ட பிரச்சினைகள் தீர சொர்ணலதாவுக்கு வாக்களிக்க வேண்டும்.

தமிழகம் ஏற்கெனவே கடனில் உள்ள நிலை யில், மேலும், பல இலவச திட்டங்களை அறிவித்து, தமிழகத்துக்கு கூடுதல் கடன் சுமையை ஏற்படுத்த உள்ளனர். லஞ்சம், ஊழல் ஆரம்பிக் கப்பட்டது திமுக ஆட்சியில் தான் என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in