அதிமுகவுக்கு அத்திக்கடவு திட்ட கூட்டமைப்பு ஆதரவு :

அதிமுகவுக்கு அத்திக்கடவு திட்ட கூட்டமைப்பு  ஆதரவு :
Updated on
1 min read

அத்திக்கடவு திட்ட கூட்டமைப் பின் ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம், அவிநாசியில் நேற்று நடைபெற்றது.

மூத்த ஒருங்கிணைப்பாளர் கள் சி.எச்.அம்பலவாணன், டி.கே.பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 60 ஆண்டு கால கோரிக்கையான அத்திக்கடவு-அவிநாசி திட்டப் பணிக்கு ரூ.1,652 கோடியில் அடிக்கல் நாட்டப்பட்டு, 75 சதவீததிட்டப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இப்பணிகளை டிசம்பர்மாத இறுதிக்குள் நிறைவு செய்ய உத்தரவிட்டுள்ள தமிழக முதல்வர்பழனிசாமி, சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால் ஆகியோருக்கு நன்றி தெரிப்பது மற்றும்சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதுஎன்பன உள்ளிட்ட தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in