

திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு, அவிநாசி, காங்கயம், தாராபுரம், பல்லடம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய 8 தொகுதிகளில் பதிவாகும் வாக்குகளை எண்ண, எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லூரியில் வாக்குஎண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படவுள்ள அறைகள், வாக்கு எண்ணும் அறைகள் மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட அனைத்துமுன்னேற்பாடுகளையும் மாவட்டதேர்தல் அலுவலரும், ஆட்சியருமான க.விஜயகார்த்திகேயன் நேற்று ஆய்வு செய்தார்.
முன்னதாக, வாக்கு எண்ணும் மையத்திலுள்ள அனைத்து பகுதிகளையும் கண்காணிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள வீடியோ கண்காணிப்பு அறைகளை பார்வையிட்டார். வாக்குப்பதிவு முடிந்த பிறகு, வாக்குப்பதிவு இயந்திரங்கள் தரைத்தளத்தில் வைக்கப்படும் தொகுதிகளின் ’ஸ்ட்ராங் ரூம்’ அறைகளின் ஜன்னல்களை அகற்றி, செங்கல் கொண்டு அடைக்கப்பட்டுள்ள பணிகளையும் பார்வையிட்டார்.
ஸ்ட்ராங் ரூம் ஏற்பாட்டில்கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளும்படி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப் பட்டது. ஆய்வின் போது, பொது பார்வையாளர்கள் ரவிசங்கர் பிரசாத், சந்தர் பிரகாஷ் வர்மா, உமானந்தாடோலி, மாஷீர்ஆலம், உட்பட பலர் பங்கேற்றனர்.