

கிருஷ்ணகிரியில் திமுக நிர்வாகியின் பெட்ரோல் பங்கில், தேர்தல் பறக்கும்படையினர் சோதனை நடத்தினர்.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் அமீன். இவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க், ராயக்கோட்டை சாலையில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு தேர்தல் பறக்கும்படை அலுவலர் உதயசூரியன் தலைமையிலான அலுவலர்கள் திடீரென ஆய்வு செய்தனர். இச்சோதனையில் தாலுகா இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் உள்ளிட்ட போலீஸாரும் உடனிருந்தனர். சோதனையில், பங்கில் இருந்த பணத்திற்கும், பெட்ரோல், டீசல் விற்பனையான தொகைக்கும் சரியாக இருந்தது. சுமார் 2 மணி நேரம் சோதனை நடந்தது.
இதுதொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டபோது, கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தகவலை தொடர்ந்து, சோதனை நடத்தியதாக தெரிவித்தனர்.