அந்தியூர் அருகே தனியார் பள்ளியில் - அமைச்சர் பணம் பதுக்கியதாக புகார் வருமானவரித் துறையினர் சோதனை :

அந்தியூர் அருகே தனியார் பள்ளியில்  -  அமைச்சர் பணம் பதுக்கியதாக புகார் வருமானவரித் துறையினர் சோதனை :
Updated on
1 min read

அந்தியூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் அமைச்சர் செங்கோட்டையன் பணத்தை பதுக்கி வைத்து, தேர்தல் செலவுக்கு பிரித்து வழங்குவதாகக் கிடைத்த தகவலையடுத்து வருமானவரித் துறை மற்றும் பறக்கும் படையினர் 4 மணி நேரத்துக்கும் மேலாக பள்ளியில் சோதனை மேற்கொண்டனர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் - அத்தாணி சாலையில் தோப்பூரில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது.

இப்பள்ளியில் அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட 13 பேர் நிர்வாகிகளாக உள்ளனர். இப்பள்ளியில் அதிமுகவினர் பணத்தை பதுக்கியுள்ளதாகவும், இங்கிருந்து வேட்பாளர்களுக்கு பணம் அனுப்பி வைக்கப்படுவதாகவும் புகார் சென்றதையடுத்து, ஈரோடு வருமானவரித் துறை மற்றும் தேர்தல் பறக்கும் படையைச் சேர்ந்த அதிகாரிகள் நேற்று காலை 8 மணிக்கு திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

பகல் 12.30 மணிக்கு சோதனை முடிந்து அவர்கள் புறப்பட்டுச் சென்றனர்.

சோதனை குறித்து பள்ளி நிர்வாகிகளில் ஒருவர் கூறியதாவது:

அந்தியூரில் இருந்து கோபி சென்ற பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று இந்த சாலை வழியாகச் சென்றபோது, பள்ளிக்கு வந்து காபி சாப்பிட்டு, சில நிமிடங்கள் ஓய்வு எடுத்துச் சென்றார்.

இதையடுத்து, அமைச்சர் இங்கு பணத்தை பதுக்கிவிட்டார், இங்கிருந்து பணம் அனுப்பப் படுகிறது என்று யாரோ வருமான வரித் துறைக்கு தகவல் தெரிவித் துள்ளனர்.

4 கார்களில் வந்த அதிகாரிகள் காலை 7 மணியில் இருந்து மதியம் வரை சோதனை செய்தனர். பள்ளி வார்டன், தலைமை ஆசிரியர் தொடங்கி வாட்ச்மேன் வரை 8 பேரின் செல்போன்களை பறித்துக் கொண்டனர்.

சோதனைக்குப் பின்னர் பள்ளி ஆவணங்கள் சிலவற்றை ஜெராக்ஸ் எடுத்தனர். சோதனை முடிவில், தவறான தகவல், சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று சொல்லிவிட்டு சென்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in