

பாபநாசம் சட்டப்பேரவைத் தொகுதி அமமுக வேட்பாளர் எம்.ரங்கசாமி நேற்று தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
பாபநாசம் வடக்கு ஒன்றியத்தில் உள்ள தியாகசமுத்திரத் தில் தனது பிரச்சாரத்தை தொடங்கிய அவர், அண்டகுடி, கூனஞ்சேரி, ஆதனூர், துரும்பூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங் களில் வாக்கு சேகரித்தார். அவருடன், மாவட்ட அவைத் தலைவர் டி.ஏ.ஜெயராமன், ஒன்றியச் செயலாளர்கள் பன்னீர்செல்வம், மகேந்திரன், மாவட்ட பிரிவு செயலாளர்கள் ஆனந்தி, திவாகரன், பாபநாசம் நகரச் செயலாளர் பிரேம்நாத் பைரவன் மற்றும் கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் சென்றனர்.