

திருப்பூரில் பறக்கும் படை அதிகாரி ராம் தலைமையிலான அதிகாரிக,ள் கணக்கம்பாளையம் பிரிவில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக காரில் அய்யம்பாளையத்தைச் சேர்ந்த வினோத்குமார் (28) வந்தார். அவரிடம்ரூ.1 லட்சத்து 86,150 இருந்தது. இதற்கான ஆவணம் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
இதேபோல, நேற்று முன்தினம் நள்ளிரவு வாவிபாளையம் பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாகவந்த மோட்டார் சைக்கிளை நிறுத்திசோதனை செய்தனர்.
அதில் வந்தவரிடம் இருந்து ஆவணங்கள் இல்லாத ரூ.2 லட்சத்து 96 ஆயிரத்தைபறிமுதல் செய்து, வடக்குவட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், அந்த பகுதியைச் சேர்ந்த டாஸ்மாக் விற்பனையாளர் கோவிந்தராஜ் என்பது தெரியவந்தது.
பறக்கும் படை அதிகாரி புவனேஷ்வரி தலைமையிலான அதிகாரிகள் பெருமாநல்லூரில் வாகன சோதனையில்ஈடுபட்டிருந்த போது, மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த புளியம்பட்டியை சேர்ந்த பிரபாகரன் என்பவரிடம் இருந்து ஆவணங்களின்றி கொண்டுவந்த ரூ.53 ஆயிரத்தை பறிமுதல் செய்து, வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். ஒட்டுமொத்தமாக 3 பேரிடமும் சேர்த்து ரூ.5 லட்சத்து 35,150-ஐ பறிமுதல் செய்தனர்.
மேலும், தேர்தல் பார்வையாளர் முஸ்தபா மற்றும் பறக்கும் படை அதிகாரி தேவி தலைமையிலான குழுவினர் திருப்பூர் கல்லூரி சாலையில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அப்பகுதியில் கொங்கணகிரியைச் சேர்ந்த பிரசாத் (21) என்பவரிடம் இருந்து8 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, வடக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கட்சி பிரமுகர் வீட்டில்...