மானாமதுரை திமுக வேட்பாளரின் தலையில் அடித்து பூசாரி அருள்வாக்கு :

திருப்புவனம் அருகே பிரமனூர் காலனி கோயில் திருவிழாவில் திமுக வேட்பாளர் தமிழரசிக்கு அருள் வாக்கு சொன்ன பூசாரி.
திருப்புவனம் அருகே பிரமனூர் காலனி கோயில் திருவிழாவில் திமுக வேட்பாளர் தமிழரசிக்கு அருள் வாக்கு சொன்ன பூசாரி.
Updated on
1 min read

மானாமதுரை தொகுதியில் அதிமுக சார்பில் நாகராஜனும், திமுக சார்பில் தமிழரசியும், அமமுக சார்பில் மாரியப்பன் கென்னடியும் போட்டியிடுகின்றனர்.

போட்டி கடுமையான நிலையில் மூவரும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அவர்கள் பல்வேறு வித்தியாசமான அணுகுமுறையை கடைப்பிடித்து வாக்குச் சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் திருப்புவனம் அருகே பிரமனூரில் திமுக வேட்பாளர் தமிழரசி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவருக்கு ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து பிரமனூர் காலனியில் அம்மன் கோயிலில் நடந்த திருவிழாவில் பங்கேற்ற தமிழரசி, சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது கோயில் பூசாரி தமிழரசியின் தலையில் அடித்து, வெற்றி உறுதி என அருள் வாக்குச் சொன்னார். இதனால் தமிழரசியும், அவரது ஆதரவாளர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in