

சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில், தேர்தல் செலவினப் பார்வையாளர் குந்தன் யாதவ் மற்றும் தூத்துக்குடி மாவட்டகாவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் ஆகியோர் தலைமையில் காவல்துறையினர் மற்றும்துணை ராணுவப் படையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியஅலுவலகம் முன்பாக தொடங்கிய கொடி அணிவகுப்புமுக்கிய வீதிகள் வழியாக ராஜ் மஹாலில் நிறைவடைந்தது.
தொடர்ந்து, அங்கு வைத்து தேர்தல் பாதுகாப்பு குறித்தஆலோசனைக் கூட்டம் தேர்தல் செலவினப் பார்வையாளர் குந்தன்யாதவ் மற்றும் எஸ்பி ஜெயக்குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இதில் திருச்சந்தூர் ஏஎஸ்பி ஹர்ஷ் சிங், எல்லை பாதுகாப்பு படை துணை தளபதி ஏ.கே. லேம்கான், பயிற்சி டிஎஸ்பி சஞ்சீவ் குமார், இன்ஸ்பெக்டர்கள் திருச்செந்தூர் ஞானசேகரன், ஆறுமுகநேரி செந்தில் குமார், ஆத்தூர் சாகுல் ஹமீது, எஸ்ஐகள், அஸாம் மாநில எல்லை பாதுகாப்பு படையினர், தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினர் மற்றும் உள்ளூர் போலீஸார் கலந்து கொண்டனர்.