அணைக்கட்டு தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் - வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த : அரசு பேருந்து நடத்துநர் சஸ்பெண்ட் :

அணைக்கட்டு தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் -  வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த : அரசு பேருந்து நடத்துநர் சஸ்பெண்ட் :
Updated on
1 min read

அணைக்கட்டு அருகே வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த வழக்கில் கைதான அரசுப் பேருந்து நடத்துநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

அணைக்கட்டு தொகுதிக்கு உட்பட்ட தெள்ளூர் கிராமத்தில் வாக்காளர்களுக்கு பணம் வழங்க முயன்றதாக தெள்ளூரைச் சேர்ந்த ராமமூர்த்தி (57), வேலூர் சத்துவாச்சாரி அலமேலு மங்காபுரம் பகுதியைச் சேர்ந்த கார்த்திபன் (51) ஆகியோரை பறக்கும் படையினர் இருதினங் களுக்கு முன்பு கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.17 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டதுடன், திமுக வேட்பாளருக்கு ஆதரவான துண்டுப் பிரசுரங்களையும் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக அரியூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில், கார்த்திபன் வேலூர் அரசுப் போக்குவரத்து கழகத்தில் பேருந்து நடத்துநராக பணியாற்றி வருவது தெரியவந்தது.

இதையடுத்து, பணம் பட்டுவாடா வழக்கில் அவர் கைதான நிலையில் அவரை பணியிடை நீக்கம் செய்து அரசுப் போக்குவரத்து கழக மண்டல அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in