‘தமிழ்நாடு’ பெயர் மாற்றம்?- கொமதேக கண்டனம்

‘தமிழ்நாடு’ பெயர் மாற்றம்?- கொமதேக கண்டனம்
Updated on
1 min read

தமிழகத்தின் பெயர் மாற்றப்படும்என பிரதமர் மோடி, உத்தரபிரதேச முதல்வர் ஆதித்யநாத் ஆகியோர் பேசியது கண்டிக்கத்தக்கது என கொமதேக பொதுச்செயலர் ஈஸ்வரன் தெரிவித்தார்.

திருச்செங்கோடு சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் கொமதேக வேட்பாளர் ஈஸ்வரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, உத்தரபிரதேச முதல்வர் ஆதித்யநாத் ஆகியோர் தமிழ்நாடு என்ற பெயரை ‘தட்சிண பிரதேஷ்’ என மாற்றுவோம் என அறிவித்திருக்கிறார்கள். ‘தமிழ்நாடு’ என பெயர் மாற்ற நம் முன்னோர்கள் எவ்வளவு போராடியிருக்கின்றனர்.

பெயர் மாற்ற முயற்சியில் ஈடுபட்டால் அதற்கான தாக்கத்தை பாதிப்பை இவர்கள் உணர்ந்தே தீருவார்கள். ஒருநாளும் ‘தமிழ்நாடு’ பெயரை பாஜக மாற்ற முடியாது. மீறி முயற்சித்தால் தமிழ்நாடு பற்றிஎரியும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in