திமுக ஆட்சியில் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேறும் : எம்ஆர்கே.வுக்கு ஆதரவாக மகன் பிரச்சாரம்

குறிஞ்சிப்பாடி திமுக வேட்பாளர் எம்ஆர்கே.பன்னீர்செல்வத்தை ஆதரித்து அவரது மகன் கதிரவன் பிரச்சாரம் செய்தார்.
குறிஞ்சிப்பாடி திமுக வேட்பாளர் எம்ஆர்கே.பன்னீர்செல்வத்தை ஆதரித்து அவரது மகன் கதிரவன் பிரச்சாரம் செய்தார்.
Updated on
1 min read

குறிஞ்சிப்பாடி தொகுதி திமுகவேட்பாளர் எம்ஆர்கே.பன்னீர் செல்வத்துக்கு கரோனா தொற்று ஏற்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக அவரது மகனும், எம்ஆர்கே கல்விக்குழும சேர்மன் கதிரவன் தொகுதியில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று முக்கிய பிரமுகர்களை சந்தித்தும், கிராமப்பகுதிகளுக்கு சென்று தீவர வாக்கு சேகரிப்பில் ஈடு பட்டுள்ளார்.

அவர் பச்சையாங்குப்பம், மணக்குப்பம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியது:

திமுக தேர்தல் அறிக்கை யில் கூறப்பட்டுள்ள குடும்பத் தலைவிக்கு ரூ.1,000, பெண் களுக்கு இலவச பஸ் பாஸ், மகளிர் சுயஉதவிக்குழு கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு மானியத்துடன் கூடிய சுழல் நிதி வழங்கப்படும் என்பது உட்படதேர்தல் வாக்குறுதிகள் அனைத் தும் நிறைவேற்றப்படும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in