தென்னிலை அருகே ஆவணங்களின்றி : கொண்டு சென்ற ரூ.37.50 லட்சம் பறிமுதல்   :

தென்னிலை அருகே ஆவணங்களின்றி : கொண்டு சென்ற ரூ.37.50 லட்சம் பறிமுதல் :

Published on

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட தென்னிலை அருகே யுள்ள வைரமடையில் கரூர்- கோவை சாலையில் அசோகன் தலைமையிலான நிலையான கண்காணிப்புக் குழுவினர் நேற்று முன்தினம் இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அவ்வழியே வந்த ஏடிஎம்மில் பணம் நிரப்பும் வாகனத்தை நிறுத்தி சோதனை யிட்டனர். இதில், ரூ.37.50 லட் சத்தை உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, வருமான வரித் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட் டது. மேலும், தொடர்புடைய அனைத்துத் துறை அலுவலர்களும் நேரில் ஆய்வு செய்து, ரூ.37.50 லட்சத்தை பறிமுதல் செய்து அரவக் குறிச்சி தொகுதி தேர்தல் அலுவலர் தவச்செல்வனிடம் ஒப்படைத்தனர்.

இதேபோல, நாகை மாவட் டத்தில் பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்புக் குழுவினர் நேற்று நடத்திய வாகன சோதனையின்போது, இருசக்கர வாகனங்களில் வந்தவர்களிடம் இருந்து, ஆழியூர் பிரிவில் ரூ.70,839, திட்டச்சேரி அருகே வவ்வாலடியில் ரூ.1 லட்சம், ப.கொந்தகை பகுதியில் ரூ.50,500 என மொத்தம் ரூ.2,21,339 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in