

தூத்துக்குடி இனிகோ நகர் பகுதியைச் சேர்ந்த ஆஸ்வால்ட் மகன் மரிய அஜித்( 24). திருச்சி தூய பவுல் இறையியல் கல்லூரியில் இறையியல் படித்த இவர்,திருச்செந்தூர் அருகே உள்ள அடைக்கலாபுரம் புனித சூசையப்பர் அறநிலையத்தில் கடந்த 6 மாதங்களாக பயிற்சி பாதிரியாராக பணியாற்றி வந்தார்.
நேற்று முன்தினம் இரவு தனது அறைக்கு தூங்கச் சென்றார்.நேற்று காலையில் பாடல் பயிற்சிக்காக பங்குத்தந்தை பிரதீப் மற்றும் சேவியர் ஆகியோர், அவரை தேடிச் சென்றனர். அறைக்குள் வேட்டியால் தூக்கு போட்டு மரிய அஜித் இறந்து கிடந்தார். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை. போலீஸார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.