அழியாத மை, படிவங்கள், உறைகள் உள்ளிட்ட - வாக்குப்பதிவுக்கு தேவையான அனைத்து பொருட்கள் தயார் :

அழியாத மை, படிவங்கள், உறைகள் உள்ளிட்ட  -  வாக்குப்பதிவுக்கு தேவையான அனைத்து பொருட்கள் தயார் :
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குப்பதிவுக்கு தேவையான அனைத்து பொருட்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் வரும் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்காக மொத்தம் 2,097 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. இவறறில் பயன்படுத்துவதற்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர், சின்னம் அடங்கிய வாக்குச்சீட்டு பொருத்தும் பணி முடிவடைந்து இயந்திரங்கள் அனைத்தும் அந்தந்த தொகுதி வட்டாட்சியர் அலுவலகங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி தொகுதிக்கான இயந்திரங்கள் மட்டும் தூத்துக்குடி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் வாக்குப்பதிவுக்கு தேவையான அழியாத மை,படிவங்கள், சீல்கள், பேனா, பென்சில், பல்வேறு உறைகள் உள்ளிட்ட 109 வகையான பொருட்கள் வாங்கப்பட்டு தொகுதி வாரியாக பிரித்து அனுப்பப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

கரோனா தடுப்பு பணிக்காகமுககவசம், கையுறை, கிருமிநாசினி உள்ளிட்ட 11 வகையான பொருட்கள் ஏற்கெனவே அந்தந்ததொகுதிகளுக்கு அனுப்பப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்குப்பதிவு பொருட்கள், கரோனா பாதுகாப்பு பொருட்கள் அனைத்தும் வரும் 5-ம் தேதி மண்டல தேர்தல் குழுக்கள் மூலம் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். 5-ம் தேதி மாலைக்குள் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் பொருட் கள் போய் சேர்ந்துவிடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

வரும் 5-ம் தேதி மண்டல தேர்தல் குழுக்கள் மூலம் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in