

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள பந்திகுறி கிராமத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர் ரவி (40). இவரது நண்பர்கள் சின்னசூளாமலை கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளிகள் ஸ்டீபன் (28), திம்மராஜ் (40). இவர்கள் 3 பேரும், நேற்று காலை வேப்பனப்பள்ளியில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி வந்து கொண்டிருந்தனர். நரணிகுப்பம் அருகே வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் வேப்பமரத்தில் மோதியது. இதில் படுகாயம் அடைந்த ரவி, ஸ்டீபன் ஆகியோர் உயிரிழந்தனர்.
மேலும், காயங்களுடன் இருந்த திம்மராஜை, அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வேப்பனப்பள்ளி போலீஸார் விசாரிக்கின்றனர்.