

ஏர்வாடியில் அதிமுகவினர் காரில் இருந்து 94,000 ரூபாயை தேர்தல் பறக்கும்படையினர் பறி முதல் செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் நேற்று மாலை முதுகுளத்தூர் தொகுதி தேர்தல் பறக்கும்படையினர் ஒரு காரை நிறுத்தினர்.
அதில் அதிமுகவைச் சேர்ந்த சிலர் இருந்தனர். காரை சோ தனை செய்ததில் தலா ரூ. 2000 வீதம் 47 கவர்களில் இருந்த 94,000 ரூபாய் மற்றும் 500-க்கும் மேற்பட்ட காலி கவர்கள், டைரி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். பணத்தை முதுகுளத்தூர் தேர்தல் நடத்தும் அலுவலர் மணிமாறனிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.