மதுபான கடைகளுக்கு விடுமுறை :

மதுபான கடைகளுக்கு விடுமுறை :
Updated on
1 min read

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு வேலூர் மாவட்டத் தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக்கடைகள் மற்றும் மதுக் கூடங்களை 4 நாட்களுக்கு மூட மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ளது. எனவே, வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளும், அதையொட்டியுள்ள மதுக் கூடங்கள் (பார்) மற்றும் நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஓட்டல்களில் உள்ள மதுக்கூடங் களை வரும் 4-ம் தேதி காலை 10 மணி முதல் மார்ச் 6-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரையும், வாக்குப்பதிவு நடைபெறும் மே-2-ம் தேதி என 4 நாட்களுக்கு மூடி வைக்க வேண்டும்.

இந்த உத்தரவை மீறி டாஸ்மாக் மதுபானக்கடைகளை திறந்து மதுபானங்களை விற்பனை செய்வதோ, மறைமுகமாக மதுபானங்களை விற்பனை செய்வது தெரியவந்தால் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மீது குற்ற வியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோல, மதுக் கூடங் களுக்கான உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், அதன் உரிமையாளர்கள் மீதும் குற்ற வியல் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in