காட்டுப் பகுதிகளில் வேட்டையாடுதல் உள்ளிட்ட - சட்ட விரோதச் செயல்களை தடுக்க நடவடிக்கை : சேலம் மாவட்ட வன அலுவலர் தகவல்

ஓமலூர் அடுத்த காடையாம்பட்டி சமூக காடுகள் சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கிராம வனக்குழுவைச் சேர்ந்தவர்களிடம் தீத்தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், அதுதொடர்பான துண்டுப்பிரசுரங்களை வனத்துறையினர்  விநியோகித்தனர்.
ஓமலூர் அடுத்த காடையாம்பட்டி சமூக காடுகள் சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கிராம வனக்குழுவைச் சேர்ந்தவர்களிடம் தீத்தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், அதுதொடர்பான துண்டுப்பிரசுரங்களை வனத்துறையினர் விநியோகித்தனர்.
Updated on
1 min read

சேலம் மாவட்ட வனப்பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது, வன விலங்குகளை வேட்டையாடுவது உள்ளிட்ட சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் தொடர்பாக பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வனத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

கோடைகாலம் தொடங்கி யுள்ள நிலையில், சேலம் வனக்கோட்டத்துக்கு உட்பட்ட அனைத்து வனச்சரகங்களிலும் உள்ள காப்பு நிலம் மற்றும் காப்புக் காடுகளில் காட்டுத்தீயினால் வனம் மற்றும் வன உயிரினங்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க சேலம் மாவட்ட வனத்துறை சார்பில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக மாவட்ட வன அலுவலர் முருகன் கூறியதாவது:

தொடர் வறட்சியினாலும், சமூக விரோதிகளாலும் ஏற்படும் தீ விபத்துகளை தடுக்கவும் கட்டுப்படுத்தவும், களப்பணியாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், தீ நிகழ்வுகளை கட்டுப்படுத்த தேவையான உபரகணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

காட்டுத் தீயினால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக வன எல்லையிலுள்ள கிராம மக்கள், வனங்கள் வழியாக செல்லும் சாலை மற்றும் பாதைகளை பயன்படுத்துபவர்கள், வனங்களுக்குள் அமைந்துள்ள பட்டா நில உரிமையாளர்கள், கிராம வனக்குழு உறுப்பினர்கள், அரசு சாரா உறுப்பினர்கள் மற்றும் வனத்தினால் பயன்பெறும் மக்கள் அனைவருக்கும் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

காட்டுத் தீ ஏற்படும்போது, அதனைக் கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பை பெறும் வகையில், தெருமுனை பிரச்சாரங்கள், சாலையோர பிரச்சாரங்கள், ஒலிப்பெருக்கி விளம்பரம், சுவர் விளம்பரம், துண்டு பிரசுரம் உள்ளிட்ட வழிமுறைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

காப்புக்காடு மற்றும் காப்பு நிலங்களை ஒட்டிய பகுதிகளில் வனவிலங்கு வேட்டை, கள்ளச் சாராயம் காய்ச்சுதல், வனநில ஆக்கிரமிப்பு உள்ளிட்ட சட்ட விரோதமான செயல்களில் எவரேனும் ஈடுபடுவது தெரியவந்தால், மாவட்ட வன அலுவலரின் செல்போன் 94451 60708 மற்றும் 0427-241 5097 தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

மேலும், ஆத்தூர் உதவி வனப்பாதுகாவலர் முருகன் 82484 59992, சித்தர்கோயில் வன விரிவாக்க அலுவலர் கண்ணன்- 86107 47543, தெற்கு சரகம் சின்னதம்பி 99523 90616, சேர்வராயன் வடக்கு சரகம், பாப்பிரெட்டிப்பட்டி தங்கராஜ்- 99425 91962, டேனிஷ்பேட்டை சரகம் பரசுராமமூர்த்தி 98653 39497, மேட்டூர் சரகம் பிரகாஷ்- 79042 34135, ஏற்காடு சரகம் உமாபதி- 96774 05358, ஆத்தூர் சரகம் செந்தில்குமார் 77182 76096, வாழப்பாடி சரகம் துரைமுருகன் 95979 99751, தம்மம்பட்டி சரகம் அசோக்குமார்-97896 61652, கல்ராயன் சரகம், கருமந்துறை துரைமுருகன் 95979 99751, நில அளவை மற்றும் குறியீடு சரகம் ஆத்தூர் வெங்கடேசன்- 94425 44873 ஆகியோரின் அலைபேசி எண்களில் அவரவர் பகுதிக்கு உட்பட்ட மக்கள் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in