வாக்கு சேகரிக்க சென்ற இடத்தில் - கடலூர் திமுக நிர்வாகிகளுக்கிடையே மோதல் : சம்பவ இடத்தில் எஸ்.பி விசாரணை

வாக்கு சேகரிக்க சென்ற இடத்தில் -  கடலூர் திமுக நிர்வாகிகளுக்கிடையே மோதல் :  சம்பவ இடத்தில் எஸ்.பி விசாரணை
Updated on
1 min read

கடலூர் தொகுதிக்கு உட்பட்டது பாதிரிக்குப்பம் ஊராட்சி. கடலூர் நகராட்சியின் விரிவாக்கப் பகுதி யாக இருந்து வருகிறது. நேற்று திமுக வேட்பாளர் கோ.ஐயப்பன் பாதிரிக்குப்பம், கூத்தப்பாக்கம் பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அவருடன் கடலூர் நகர திமுக செயலாளர் ராஜா இருந்துள்ளார்.

ஆனால், வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பகுதி ஒன்றிய பகுதிகளாகும். இதனால், அப்பகுதியின் பொறுப்பாளரான விக்ரமன் என்ப வர் பிரச்சார வாகனத்தை மறித்து, ‘ஒன்றிய பொறுப்பாளர் இல்லாமல் எவ்வாறு வாக்கு சேகரிக்கலாம்’ என்று கேட்டுள்ளார். இதற்கு நகர செயலானர் ராஜா எதிர்ப்புத் தெரிவித்ததால் இருவரின் ஆதரவாளர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனால், வாக்கு சேகரிக்கச் சென்ற இடத்தில் பதற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து செய்வதறி யாது திகைத்த வேட்பாளர் கோ.ஐயப்பன் தனது பிரச்சா ரத்தை பாதியில் நிறுத்தி விட்டு திரும்பினார். எனினும், நகர செயலாளர் மற்றும் ஒன்றிய பொறுப்பாளரின் ஆதரவாளர்கள் அதே இடத்தில் நின்றதால் மேலும் மோதல் ஏற்படும் நிலை உருவானது.

இது குறித்து தகவலறிந்த திருப்பாதிரிபுலியூர் காவல் நிலைய ஆய்வாளர் குணசேகரன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று இரு தரப்பினரையும் கலைந்து போகச் செய்தனர். இதனைத் தொடர்ந்து, எஸ்பி.ஸ்ரீஅபிநவ் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி னார். அப்பகுதியில் மேலும் மோதல் ஏற்படாமல் இருக்கும் வகையில் போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்தினார்.

வாக்கு சேகரிக்க சென்ற இடத்தில், வேட்பாளர் முன்னிலையிலேயே திமுக பொறுப் பாளர்கள் மோதிக் கொண்டது கடலூரில் பரபரப்பை ஏற்படுத் தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in