மேல்மலையனூர் வட்டாட்சியரை மாற்றக்கோரி - பாமக வேட்பாளர் சாலை மறியல் :

மேல்மலையனுார் வட்டாட்சியரை மாற்றக் கோரி செஞ்சியில் சாலை மறியலில் ஈடுபட்ட பாமகவினர்.
மேல்மலையனுார் வட்டாட்சியரை மாற்றக் கோரி செஞ்சியில் சாலை மறியலில் ஈடுபட்ட பாமகவினர்.
Updated on
1 min read

செஞ்சி சட்டசபை தொகுதியில் செஞ்சி, மேல்மலையனூர் தாலு காக்கள் உள்ளன. செஞ்சியில் ராஜனும், மேல்மலையனூரில் நெகருன்னிசாவும் வட்டாட்சியராக உள்ளனர். இவர்கள் இருவரும் சட்டசபை தேர்தலுக்கான உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

சில தினங்களுக்கு முன்பு மேல்மலையனூர் தாசில்தார் நெகருன்னிசா, திமுக வேட்பாளர் மஸ்தானுக்கு ஆதரவாக செயல் படுவதாக பாமகவினர் தேர்தல் பார்வையாளருக்கு புகார் அளித்தனர். இந்த புகார் மீது நடவ டிக்கை எடுக்காமல் கால தாம தம் செய்வதைக் கண்டித்து நேற்றுகாலை 11 மணிக்கு பாமக வேட் பாளர் ராஜேந்திரன் தலைமையில் நுாற்றுக்கும் மேற்பட்டவர்கள் செஞ்சி நான்குமுனை சந்திப்பில் திடீரென சாலை மறியலில் ஈடு பட்டடனர்.

இத்தகவல் அறிந்த செஞ்சி டிஎஸ்பி இளங்கோவன், தாசில்தார் ராஜன் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். நீண்ட நேரம் நடந்த பேச்சுவார்த்தையில், மாவட்ட தேர்தல் அலுவலருடன் இதுதொடர்பாக பேச்சு நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதை யடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

இதுதொடர்பாக இன்று மாவட்ட தேர்தல் அலுவலர் முன்னிலையில் பேச்சு நடத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாசில்தார் நெகருன்னிசா, திமுக வேட்பாளர் மஸ்தானுக்கு ஆதரவாக செயல்படுவதாக பாமகவினர் தேர்தல் பார்வையாளருக்கு புகார் அளித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in