

அவர்கள் திமுக தலைவர் கருணாநிதி, ஸ்டாலின் போல வேடமிட்டும், டிரம் செட் அடித்தும் வாக்குச் சேகரித்தனர். மேலும் ஸ்டாலின் நேரில் வந்தால் எவ்வாறு குறை கேட்பாரோ, அதேபோல் பெண்களிடம் குறைகளைக் கேட்டனர். வேட்பாளர் குணசேகரன் மூலம் குறைகளை தீர்ப்பதாகவும் உறுதி அளித்தனர்.
மாறுவேட கலைஞர்களுக்கு பெண்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் மூதாட்டிகள், குழந்தைகளோடு அவர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.