

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் நாளிலிருந்து 72 மணி நேரத்துக்கு முன்னதாக வேட்பாளர்கள் இருசக்கர வாகன பேரணி நடத்த அனுமதி கிடையாது.
இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெயசந்திர பானு ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இந்திய தேர்தல் ஆணையத் தின் உத்தரவின்படி, சட்டப் பேரவைத் பொதுத்தேர்தல் நடைபெறும் பகுதிகளில் தேர்தல் நாள் மற்றும் அதற்கு 72 மணி நேரம் முன்னதாக உள்ள காலத்தில் இருசக்கர வாகன பேரணி நடத்தி அதன் மூலம் வாக்கு சேகரிப்பு செய்ய தடை விதித்துள்ளது.
எனவே, 3-ம் தேதி மாலை 7 மணியில் இருந்து 7-ம் தேதி காலை 7 மணி வரை இருசக்கர வாகன பேரணி நடத்த வேட்பாளர்களுக்கு அனுமதி இல்லை.