

தஞ்சாவூர் மாவட்டத்தில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் நேற்று தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர் மாநகராட்சி கணபதி நகர் பகுதிகளில் வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக, வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் நேற்று தொடங்கி வைத்தார்.
பின்னர், ஆட்சியர் செய்தியா ளர்களிடம் கூறியது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஏப்.6-ம் தேதி நடைபெறும் தேர்தலை சுமுகமாக நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் படிப்படியாக செய்து வருகிறோம். தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி வாக்காளர் தகவல் சீட்டு விநியோகம் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளிலும் இந்த பணி 5 நாட்களுக்குள் முடிக்கப்பட்டு, அனைவருக்கும் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கப்படும். அனைத்து தொகுதிகளிலும் தபால் வாக்கு கள் அளிக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இதுவரை 8,307 தபால் வாக்குகள் பதிவாகி உள்ளன.
தேர்தல் செலவின பார்வையா ளர்கள் 8 தொகுதிகளிலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்டதாக இதுவரை ரூ.1 கோடி மதிப்புள்ள பரிசுப் பொருட்கள், ரொக்கம் பறி முதல் செய்யப்பட்டுள்ளன என்றார்.
தஞ்சாவூர் சட்டப்பேரவை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் வேலுமணி, மாநகராட்சி ஆணையர் ஜானகிரவீந்திரன் மற்றும் அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.