

தூத்துக்குடியில் உரிய அனுமதியின்றி டாரஸ் லாரியில் சரள் மண் கடத்தியவர் கைது செய்யப்பட்டார். லாரி மற்றும் 6 யூனிட் சரள் மணல் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரி சுகந்த ராஷிமா நேற்று முன்தினம் தூத்துக்குடி எப்சிஐ ரவுண்டானா அருகே வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக சரள் மண் ஏற்றி வந்த டாரஸ் லாரியை வழிமறித்து சோதனை செய்ததில் உரிய அனுமதியின்றி சரள் மண் எடுத்து வருவது தெரியவந்தது.
இதுகுறித்து அவர் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் செய்தார். சிப்காட் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அனுமதியின்றி சரள் மண் கடத்தியதாக புதுப்பட்டி பகுதியைச் சேர்ந்த சின்னத்துரை மகன் காளிமுத்து (26) என்பவரை கைது செய்து, லாரி மற்றும் 6 யூனிட் சரள் மண்ணை பறிமுதல் செய்தனர்.