

வேலூரில் தனியார் நிறுவன செல்போன் கோபுரத்தை அகற்றக்கோரி பொதுமக்கள் நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் சத்துவாச்சாரி விஜயராகவபுரம் 1-வது தெருவில் கடந்த 3 ஆண்டு களுக்கு முன்பு தனியார் நிறுவனம் சார்பில் செல்போன் கோபுரம் அமைத்துள்ளனர். தற்போது செல்போன் கோபுரம் செயல்படாமல் இருப்பதால் அகற்ற வேண்டும் என கோரி அப்பகுதி மக்கள் நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த சத்துவாச்சாரி காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
கோபுரம் அகற்ற நடவடிக்கை
இதனை ஏற்று போராட் டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.