

கறம்பக்குடி அருகே அதிமுக பிரமுகரின் காரில் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே புதுவிடு தியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் சுலைமானுக்கு சொந்தமான காரை சுக்கிரன்விடுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று இரவு சோதனை செய்தனர். இதில், அந்தக் காரில் 26 கவர்களில் இருந்த ரூ.52 ஆயிரத்தை பறிமுதல் செய்து கந்தர்வக்கோட்டை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கரு ணாகரனிடம் ஒப்படைத்தனர்.