

தென்காசி மாவட்டத்தில் உள்ள5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதற்றமான, மிகவும் பதற்றமான வாக்குச் சாவடிகளில்வாக்குப்பதிவு பணியை பார்வையிட தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் பணியாளர் கள் நுண் பார்வையாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுடன் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான சமீரன் முன்னிலை வகித்தார். தேர்தல் பார்வையாளர்கள் (பொது) ராஜு நாராயண சுவாமி, பிரகாஷ் பிந்து, வேதபதி மிஸ்ரா ஆகியோர் தலைமை வகித்தனர்.
கூட்டத்தில் தென்காசி மாவட்ட வருவாய் அலுவலர் ஜனனி சவுந்தர்யா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கவிதா, கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) சேக் அப்துல் காதர், நேர்முக உதவியாளர் (தேர்தல்) முருகேசன், தேர்தல் வட்டாட்சியர் சண்முகம், 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.