

திருப்பூர் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட வாவிபாளையம் பகுதியில் பறக்கும் படை அதிகாரி தேவி தலைமையிலான அதிகாரிகள் மற்றும் போலீஸார் அடங்கிய குழுவினர் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
காரில் இருந்த நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்த பனியன் நிறுவன உரிமையாளர் ஆதிகும்பேஷ்வரர் (28) என்பவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.81400 இருந்தது. இதையடுத்து, பணத்தை பறிமுதல் செய்து, திருப்பூர் வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.